சிரிய இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று கண்டனப் போராட்டம்!

Thursday, March 1st, 2018

சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக இன்று முதலாம் திகதி யாழ்.பஸ்நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

சிரியா கௌடாவில் நடைபெற்றுவரும் போரில் பல ஆயிரக் கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் அதிகமாக அப்பாவிக் குழந்தைகளே கொல்லப்பட்டு வருகின்றனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட, காயமடைந்த குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களூடாக வைரலாகி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2009 இல் இதே போன்ற அழிவை ஈழத் தமிழினமும் சந்தித்திருந்தது. இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக ஈழத் தமிழ் இளைஞர்கள் குரல் கொடுக்க ஆயத்தமாகியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று முதலாம் திகதி காலை 10 மணியளவில் யாழ்.பிரதான பஸ்நிலையம் முன்பாக கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது.

Related posts: