சாவகச்சேரி மகளிர் கல்லூரியை தாக்கியது மின்னல்: அச்சத்தில் மாணவர்கள்!

Wednesday, May 23rd, 2018

சாவகச்சேரி மகளிர் கல்லூரி கணணி ஆய்வுகூடத்தில் மின்னல் தாக்கியதால் பாடசாலையின் ஆய்வுகூடக் கட்டிடம் சேதங்களுக்கள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்திலேயே இந்த அனர்த்தம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது

குறித்த கணணி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மானியில் மின்னல் தாக்கியதில் சிறியளவில் தீப்பிடித்த நிலையில் தீ அணைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சாவகச்சேரிக்குச் சென்றுள்ளதுடன், இலங்கை மின்சார சபையினரும் சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து, கல்லூரி மாணவிகள் அச்சமடைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் குறித்த சம்பவத்தைப் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: