சாவகச்சேரியில் கத்திக் குத்தில் இளைஞன் படுகாயம்!

Friday, March 23rd, 2018

யாழ். சாவகச்சேரி நகரப் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது இன்றைய தினம்(23) பட்டப் பகல் வேளையில் சரமாரிக் கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டதில் அவர் படுகாயங்களுக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல்-10.30 மணியளவில் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வடமராட்சியைச் சேர்ந்த 25 வயது இளைஞன் படுகாயங்களுக்கு இலாக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சாவகச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர்  சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: