சாதாரணதர பரீட்சை மீள் ஆய்வு பெறுபேறுகள் வெளியாகின!

Tuesday, July 26th, 2016
2015ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மீண்டும் தமது பெறுபேறுகளை மீள் ஆய்வு செய்வதற்கு விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியிருந்தது.
இதற்கமைய மாணவர்கள் தமது மீள்பரிசோதனை விண்ணப்பங்களை அனுப்பியமைக்கு அமைய 1200 மாணவர்களது பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மீள்பரிசோதனைக்கு நாடு பூராகவும் இருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள்பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Related posts: