சாதாரணதரப் பரீட்சை: அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு விசேட தொலைபேசி இலக்கம்!

Monday, December 4th, 2017

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பிலான பிரச்சினைகளை அறிவிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் தொலைபேசி இலக்கமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் தொடர்பில் 1911 என்ற தொலைபெசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சாரத்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கரள் பாடசாலை அதிபருக்கும், தனியாருக்கான அனுமதிப்பத்திரங்கள் பரீட்சாரத்திகளின் விலாசத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

4 29, 493 பாடசாலை பரீட்சாரத்திகளும், 259,080 தனியார் பரீட்சாத்திகளும் இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

இதன்பிரகாரம் 688,573 பேர் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ளனர். கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப்பரீட்சை இம்மாதம் 12 அம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts: