சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள்!

Saturday, December 16th, 2017

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று(14) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு;ள்ளது. அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிசாத் பதியூதீன் ஆகியோரும், அரச-தனியார் துறை நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அரிசி, பருப்பு, சீனி, நெத்தலி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, டின்மீன் உட்பட எட்டு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சலுகை பொதியும் சந்தையில் அறிமுகம் செய்யப்படும். தனியார் சுப்பர் மார்க்கட் தொகுதிகள், சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த சலுகை பொதி விற்பனை செய்யப்படும்.

Related posts: