சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர், குறித்த உடன்படிக்கை தொடர்பான விபரங்கள் உரிய குழுக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர் ஒரு வரைவு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விடயம் பாராளுமன்றத்தில் பல தடவைகள் எழுப்பப்பட்டதாகவும் அவைத் தலைவர் மற்றும் நிதியமைச்சர் இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: