சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு!

Saturday, April 21st, 2018

எதிர்வரும் 6 மாதங்களுக்கு இலங்கையுடன் அடுத்தக்கட்ட மறுசீரமைப்பு மற்றும் இந்த ஆண்டுக்குள் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துதல் என்பன தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அமைச்சரவை அனுமதிக்காகஅனுப்பிவைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்தில் அடுத்தக்கட்ட மதிப்பீடுகளுக்கு முன்னர் இலங்கை நடைமுறைப்படுத்தும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை தொடர்பான 4ஆம் கட்ட மதிப்பீடுகளை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Related posts: