சத்திரசிகிச்சை தொடர்பில் புதிய சுற்றறிக்கை: சுகாதார சேவை பணிப்பாளர் தகவல்!

Saturday, April 25th, 2020

நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக, மருத்துவமனைகளுக்கு புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமான, விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மருத்துவமனைகளின் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையை ஆராய்ந்து, பொதுமக்களுக்கு வழமையான முறையில் சேவைவையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் படிப்படியாக நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சத்திரசிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: