சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை!

Thursday, August 17th, 2017

சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற ஆவணங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைக்கு போதுமான ஆட்கள் திணைக்களத்தில் இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், என்.ஆர். அபேசூரிய தெரிவித்துள்ளார்.

விஷேடமாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக அதிகளவான ஆவணங்கள் கிடைக்கப் பெறுவதாகவும், அவை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் சம்பந்தமாக வடமேல் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரிகளை தௌிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், என்.ஆர். அபேசூரிய இதனைக் கூறியுள்ளார்.

Related posts: