சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு – அரியாலை, பூம்புகாரில் பயணித்த மூவர் தப்பியோட்டம்!

Saturday, July 24th, 2021

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு சட்டவிரோத மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தின்  ரயர் பகுதிமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.

இன்று அதிகாலை 1.40 மணி அளவில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தினை கடமையில் இருந்த போலீசார் மறித்த போது வாகனம்  நிறுத்தாது சென்றதன் காரணமாக உழவு இயந்திரத்தின்  சில்லுபகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: