சட்டவிரோத மணல் அகழ்வு – வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி சூடு!

Friday, April 30th, 2021

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும், கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. தப்பி சென்றவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Related posts: