சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேலணையில் பொலிஸ் காவலரண் வேண்டும் – பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி கோரிக்கை!

Tuesday, March 12th, 2019

வேலணைப் பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அராலி சந்தி மற்றும் வங்களாவடி பகுதியில் பொலிஸ் காவலரண்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பின் போது வேலணைப் பிரதேசம் சட்டம் ஒழுங்கு தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: