சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணில் ஈடுபடுவோர் தொடர்பில் பணியகம் பொறுப்புக் கூறாதிருப்பதற்கான தீர்மானம்!

Sunday, October 22nd, 2017

சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணில் ஈடுபடுவோர் தொடாபில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்புக்கூறாதிருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணியில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் சிறையில் அடைக்கப்படுதல், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படல் அல்லது மரணம் ஏற்படும் போது அது தொடர்பில் செலவுகள் குறித்து எந்த வித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக பணியில் ஈடுபடும் நபர்கள், குறிப்பிட்ட நாடுகளின் சட்டத்தை மீறுவதுடன், இதனால் தண்டப் பணம் செலுத்தல், சிறையில் அடைக்கப்படுதல் முதலான பாரிய தண்டனைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும். இது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் உறவினர்களிடம் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 15 இலட்சம் இலங்கையர்கள் தற்போது வெளிநாடுகளில் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர.  இவ்வாறு சட்டவிரோதமாக பணிகளில் ஈடுபடும் இலங்கையர்களினால் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பிற்குத் தகுதி பெற்றுள்ள நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு இல்லாமல் போவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புக் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட நாடுகள் இலங்கையுடன்கொண்டுள்ள தொடர்பும் பாதிப்படையுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: