கொவிட் 19 தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரிப்பு!

உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 565 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் அமெரிக்காவில் 19 ஆயிரத்து 988 பேர் புதிதாக இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை மொத்தமாக 3 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 1 இலட்சத்து 63 ஆயிரத்து 479 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
அதேநேரம் ஸ்பெயினில்; நேற்றைய தினம் மாத்திரம் 913 பேர் கொரோனா வைரஸ்சால் பலியாகியுள்ளனர்.
அங்கு இதுவரை 7 ஆயிரத்து 716 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அங்கு 7 ஆயிரத்து 846 பேர் புதிதாக இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் மொத்தமாக இதுவரை 87 ஆயிரத்து 956 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேநேரம் ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் நேற்றைய தினம் மாத்திரம் 812 பேர் பலியாகினர்.
அங்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இத்தாலியில் புதிதாக 4 ஆயிரத்து 50 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
|
|