கொலம்பியா ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Friday, October 7th, 2016

2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது.

இதன்படி, முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாகவும், இயற்பியலுக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் தவ்லெஸ், டங்கன் ஹால்டன், மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாகவும், வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸைச் சேர்ந்த ஜீன்-பியர் சவாஜ், பிரிட்டனின்ஜே. ஃபிரேஸர் ஸ்டட்டார்ட், நெதர்லாந்து நாட்டின் பெர்னார்டு ஃபெரிங்கா ஆகியோருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் குழு தலைவர் கோலி குஸ்மன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தென் அமெரிக்க நாடான கொலம்பியா 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்துவதில் மேனுவல்சாண்டோஸ் முக்கிய பங்காற்றினார்.  இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 228 தனிநபர்களின் பெயர்கள் மற்றும் 148 அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

881312463Untitled-1

Related posts: