கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Friday, July 10th, 2020

கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜெனீவா நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவு தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான் தெரிவிக்கையில்,

“.. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் ஜூன் மாதத்தில் நாம் பார்த்தது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புதான். அத்துடன் இன்னும் வேகம் எடுக்காதது, உயிர்ப்பலிகள்தான். அதற்கு இன்னும் காலம் எடுக்கும். இதில் சில பின்னடைவுகள் இருக்கலாம். பலி எண்ணிக்கை உயரப்போவதை இனி நாம் காண முடியும்”

“கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் பாதிப்பு அதிரடியாக கூடிக்கொண்டே வருகிறது. ஆனால் பலி எண்ணிக்கை மே மாதம் முதல் ஸ்திரமாக உள்ளது. பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் கொரோனா நோயாளிகளை நிர்வகிக்க கற்றுக்கொண்டு விட்டனர். இதுதான் உயிர்ப்பலி குறைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts: