கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக உயர்வு!

Monday, June 14th, 2021

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 361 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநெரம் குறித்த தொற்றாளர்களில் 2 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான 32 ஆயிரத்து 955 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன நிலையில் 2 ஆயிரத்து 136 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாளை அவசரமாக கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை - பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பு!
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
எரிபொருட்களின் விலை உயர்ந்தால் பொதுப் போக்குவரத்துத்துறை பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் - இரா...