கூட்டு ஒப்பந்தத்தை இரத்து தொடர்பான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!

Sunday, January 22nd, 2017

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு கோரி, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவானது விசாரணைக்கு தகுதியானது என நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்பிரகாரம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதியரசர் சி.துறைராஜா உத்தரவிட்டுள்ளார்.

court

Related posts: