கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மக்கள் போர் கொடி!

Sunday, August 2nd, 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முல்லைத்தீவு, நந்திக்கடல் பிரதேச மக்களினால் கடுமையான எதிர்ப்பு ளெியிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தூர்வாரி, துப்பரவு செய்யப்படாமல்  இருந்த நந்திக்  கடல் நீர் நிலையினை புனரமைக்கும் வேலைகள் இன்று(02.08.2020) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கூட்டமைப்பின் முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கே எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்ந முப்பது வருடங்களுக்கு மேலாக நந்திக்கடல் களப்பு பிரதேசம் தூர்வாரப்படாமையினாலும் சுனாமியின் போது ஒதுக்கப்பட்ட ஆழ்கடல் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றமையினாலும் குறித்த நீர்நிலையின் இயல்புச் சூழல் குழப்பமடைந்துள்ளது.

இதன்காரணமாக குறித்த நீர்நிலையில் மீன், இறால் போன்ற கடலுணவு உற்பத்தி அருகி வருகின்றமையினால், அதனை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற சுமார் 5000 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக இன்றைய தினம் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், கூட்டமைப்பினர் மேற்கொணட முறைப்பாடு காரணமாக தேர்தல் திணைக்களத்தினர் தலையிட்டு, தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் நந்திக்கடல் புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், குறித்த பகுதியில் ஒன்று திரண்ட பிரதேச மக்கள் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கூட்டமைப்பின் அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடுகளுக்கு தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். இதேபோன்று கடந்த காலங்களிலும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் கூட்டமைப்பினால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: