குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் மாலைதீவுடன் இலங்கை ஒப்பந்தம்!

Saturday, September 24th, 2022

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர சட்ட உதவிகள் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள நீதி, சிறைச்சாலை செயற்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் ஒருங்கிணைந்த விசாரணைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகளைத் தவிர்க்க உதவும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர உறவுகளை வளர்க்க உதவும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்ப...
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்க...
EPF, ETF ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்...