குறுகிய அரசியல் தேவைகளுக்காக சுதந்திரத்தை பயன்படுத்தக்கூடாது – ஜனாதிபதி !

Thursday, November 17th, 2016

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (16) முற்பகல் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் 47வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய அரசாங்கம் அரச கொள்கைகளுக்கமைய சகல துறைகளிலுமான பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றி வருகிறது, என்று கூறிய ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ள அரசு, படிப்படியாக முன்னோக்கி பயணிப்பதாகவும் ஒருசிலர் எதிர்பார்ப்பது போல் உடனடியாக தீர்வு காணமுடியாதபோதிலும் முறையான திட்டங்கள் மூலம் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பாடுபடுவதாகவும் தெரிவித்தார். சுதந்திர சுகாதார சேவையை மேலும் பலப்படுத்துவடன் அத்துறையிலுள்ள அனைவரினதும் தொழில் சிறப்புரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

151002171907_president_media_512x288_presidentoffice_nocredit

Related posts: