குறிக்கோளை அடைய அனைவரும் செயற்பட வேண்டும்-பாதுகாப்புச் செயலர்!

Tuesday, January 3rd, 2017

தேசிய குறிக்கோளினை அடையும் வகையில் நல்லிணக்கம் , பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட செயற்றிட்டங்களை செயற்படுத்த உறுதியுடன் செயற்படுமாறு பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற புதுவருடத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகளினால் சத்திய பிரமாணமும் எடுக்கப்பட்டது.

karuna-sena1

Related posts: