குமார் சங்கக்கார அரசியலுக்கு வந்தால் முழு ஆதரவு – அமைச்சர் ராஜித!

Friday, July 27th, 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அரசியலுக்கு வந்தால் முழுமையான ஆதரவு வழங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

தேசிய அரசியலுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் அவரே தேவையானவர். எனவே அவர் வருவாராயின் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.