குப்பி விளக்குடன் வாழ்ந்த காலத்தை மாற்றியமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணியுங்கள் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச நிர்வாக பொறுப்பாளர் சின்னையா சிவராசா!

Friday, March 5th, 2021

ஓலைக் குடிசைகளுக்குள் குப்பி விளக்குடன் வாழ்ந்த காலத்தை மாற்றியமைத்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் பரந்துபட்ட நோக்குடன் சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்திருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக பொறுப்பாளர் சின்னையா சிவராசா தற்போது இந்த அரசாங்கத்தினூடாக கிடைக்கின்ற மக்கள் நலத்திட்டங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக முடியுமானவரை எமது தீவக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

சுபீட்சம் சமுர்த்தி உற்பத்திக கிராம நிகழ்ச்சி் திட்டத்தின் கீழ் மேற்கொ்ளப்படுகின்ற அழகிய உற்பத்தி கிராம கருத்திட்டத்தின் அங்கரார்ப்பண நிகழ்வு இன்று நாடுமுழுவதும் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஒரு அங்கமாக வேலணை பிரதேச செயலகத்தில் 26 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில் –

தற்போதைய அரசாங்கம் எமது நாட்டையும் மக்களையும் முழுமையான அபிவிருத்தியை நோக்கியே அழைத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

ஆனாலும் அதை குழப்பவதற்கு பலர் அந்நிய சக்திகளுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகையவர்களது சுயநல அரசியலுக்க எடுபடாது அனைவரும் நாமத் எமது பிரதேசம் எமது நாடு என்ற உணர்வடன் இந்த அரசுக்கு ஆதரவை கொடுப்பதனூடாகவே இன்னும் பல தேவைப்பாடுகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறான தேவைப்பாடுகளை உணர்ந்து மக்கள் எது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களுக்கு அதிகளவு அதிகாரங்களை கொடுப்பதனூடாக எமது அபிலாசைகளை வெற்றிகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புங்குடுதீவு சமுர்த்தி வங்கியிலும் குறித்த நிகழ்வு நடைபெற்றிருந்தது. இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: