கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டம் !

Tuesday, October 27th, 2020

கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்குழு, வாழ்வாதார மேம்பாட்டுக்குழு, உள்நாட்டு உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்திக்குழு, கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்குழு என்றவாறு இராஜாங்க அமைச்சை பிரதானமாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதமர் அலுவலகத்தினால் இந்த வேலைத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இந்ததிட்டத்தை செயற்படுத்துவதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: