காலநிலையில் மாற்றம் – பாடசாலை செல்லும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்தது – சுகாதாரத் துறையின் விசேட அறிவிப்பு!

Monday, December 12th, 2022

இன்றுமுதல் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவதை அறிவுறுத்துவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்காலத்தில் சுவாச நோய்கள் மற்றும் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகமூடி அணிவது நன்மை பயக்கும் என சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இன்றைய நாட்களில் குளிர் மற்றும் தூசி என இரண்டு காரணங்களால் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகம் இருப்பதால், குழந்தைகள் இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முகமூடி அணிந்து பாடசாலைக்கு சென்றால் நல்லது.

இது பாடசாலைகளிலும் தினப்பராமரிப்பு நிலையங்களிலும் எளிதில் பரவும்.குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி இருந்தால், வீட்டிலேயே வைத்திருங்கள். முடிந்தால் பாடசாலை செல்லும் குழந்தைகள் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

“உங்களுக்கொரு வீடு உங்கள் நகரத்தில்” யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் க...
சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை - சுற்றாடல் அமை...
அரச பணியாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு மட்டுமன்றி உள்நாட்டில் வேலை செய்வதற்கும் சம்பளமில்லாத வ...