காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவாளர் தெரிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட போர் சூழ்நிலைகளினாலோ அல்லது ஏனைய காரணங்களினாலோ முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போய் ஒரு வருடம் கடந்தவர்களை இறந்ததாகக் கருதி இறப்புப் பதிவு செய்யும் தற்காலிகமான ஏற்பாடுகள் அரசாங்கத்தினது கால எல்லை நீடிக்கபட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட காணிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
காணாமல் போனவர்கள் தொடர்பில் இறந்ததாக பதிவு செய்யும் கால எல்லை முடிவடைந்த நிலையில் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மார்கழி மாதம் 9ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதனைக் கருத்தில் கொண்டு பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் தங்கள் பகுதி பிரதேச செயலக பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர் அலுவலகத்துடனோ அல்லது முல்லைத்தீவு மாவட்ட பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர் அலுவலகத்துடனோ தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|