களுகங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு – வெள்ளப்பெருக்கு அபாயம்!

Friday, July 19th, 2019

களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இரத்தினபுரி மாவட்டத்தில் சில பிரேதேச செயலக பிரிவுகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரத்தினபுரி எலபாத, கிரியெல்ல மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு அவதானம் காணப்படும் பிரதேச மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம், கோரியுள்ளது.

இதேவேளை, தெற்கு, தென்மேற்கு, மேல் மாகாணத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள கடற்றொழில் துறைமுகத்திற்கு திரும்பி வருமாறு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.

Related posts: