கல்வியியற் கல்லூரிக்குப் பதிவு செய்ய பதிவுத் தபால் கட்டாயம்!

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பப் பதிவுகள் இணையத்தளம் மூலமாக மேற்கொள்ளப்படுவது கட்டாயம் இல்லை. ஆனால் பதிவுத் தபாலில் அனுப்புவது கட்டாயமானது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய மூன்று வருடங்கள் சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறிகளைப் பயில்வதற்கு மாணவர்கள் இணைத்துக்கொள்வதற்கான அரசிதழ் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்கள் இணையவழியிலும் பதிவுத் தபாலிலும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இணையவழி முறைமை ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது முடியுமாக இருந்தாலும் அல்லது முடியாவிட்டாலும் சகல விண்ணப்பதாரர்களும் அரசிதழ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முறையாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் உரிய முகவரிக்கு அனுப்பி வைப்பது கட்டாயம். பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை அனுப்பாத விண்ணப்பதாரர்கள் தொடர்பாக கல்வி அமைச்சு எந்தவிதமான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|