கல்லுண்டாயில் மோட்டார் சைக்கிள் – பட்டா கோர விபத்து : ஒருவர் படுகாயம்!

Monday, April 30th, 2018

கல்லுண்டாய் வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பட்டா வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

இன்று முற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வட்டுக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பட்டா வாகனமும் நேருக்கு நேர் மேதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: