கப்பல்களின் வருகை 5 சதவீத அதிகரிப்பு!

2016ம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் 4195 கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்துள்ளன. 2016ம் ஆண்டில் துறைமுகத்திற்கு வந்த கப்பல்கள் 4405 ஆக அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
2015ம் ஆண்டு 3643 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் 3804 கொள்கலன்கள் துறைமுக பிரிவினால் கையாளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.இதன் காரணமாக கொள்கலன்களின் எண்ணிக்கை 4% அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Related posts:
நல்லூர் வீதிகள், பொது இடங்களில் குப்பை போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
நவீனமயமாகிறது பலாலி விமான நிலையம்!
வரலாற்று வெற்றியுடன் நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கின்றார் மஹிந்த ராஜபக்ச!
|
|