கண்களை பாதிக்கும் வைரஸ்: மக்களே அபாயம்!
Tuesday, July 19th, 2016
நாட்டில் ஒரு வகை வைரஸ் தொற்றினால் கண் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாககண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் தொற்றினால் கண் சிவப்படைதல்,கண்ணீர் அதிகமாக வருவதுடன்,சிறியளவிலான வலியும் இருக்கும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நன்றாக சவர்க்காரமிட்டுகைகளை சுத்தப்படுத்தி அல்லது சுத்தமான கைக்குட்டைகளை பயன்படுத்துமாறும் கண்மருத்துவ சிறப்பு வைத்தியர் தர்மா இங்குல்பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கு செல்வதைதவிர்க்குமாறும்,குறித்த கண் நோயிலிருந்து விசேடமாக சிறுவர்களைபாதுகாக்குமாறும், கண் நோய் ஏற்பட்டிருக்குமானால் மாணவர்களை பாடசாலைக்குஅனுப்புவதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Related posts:
வீசா தொடர்பில் இலங்கை - கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கை!
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் - கல்வியமைச்சர் !
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கான புதிய யாப்பு விரைவில் - விளையாட்டுத்துறை அமைச்சு அறிவிப்ப...
|
|