கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள்!
Friday, March 27th, 2020இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ள வெளிநாட்டவர்களை தமது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரஷ்யா மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மூன்று விமானங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
பயணிகள் எவரும் இல்லாமல் இந்த விமானங்கள் வந்துள்ளதுடன் இலங்கையில் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் தமது நாட்டுப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக இந்த விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமது நாடுகள் விடுத்திருந்த அழைப்புக்கு இணங்க பெருந்தொகையான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல நேற்று மாலையும் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தது.
அதேவேளை ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Related posts:
பரீட்சை இலகுபடுத்தலை ஆராயக் குழு நியமனம் - பரீட்சைத் திணைக்களம்!
மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஒரு முட்டை – கல்வி அமைச்சக்கு பிரதமர் ஆலோசனை!
உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த பரிந்துரைகளை வழங்க விசேட குழு !
|
|
கொரோனா அபாயம் நீங்கவில்லை - மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள து சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிர...
சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர் - நரம்பியல் நிபுணர் பேராசிரிய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சி...