கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் எண்ணம் இல்லை – விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கும் தீர்மானம் தற்போதைக்கு இல்லை என விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஷ்ரப் ஹய்தாரி அமைச்சர் ரணதுங்கவை சந்தித்துப் கலந்துரையாடினார். இதன்போது கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் –

சுகாதாரத் துறையினர் மற்றும் கோவிட்-19 வைரஸ் தடுப்புப் படையணியின் ஆலோசனையின் பின்னரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, கொரோனா வைரஸ் குறித்த எந்தவித உறுதியான முடிவும் இன்றி விமான நிலையத்தைத் திறந்தால் நாட்டு மக்களுக்கே ஆபத்து ஏற்படும் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: