கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது – காரணம் என்ன?

Friday, June 1st, 2018

ஓமான் – மஸ்கட்  விமானநிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை பெய்த அடை மழை காரணமாக குறித்த விமானத்தை மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கக்பபடுகின்றது. அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானம் 5.20 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அதன் பின்னர் காலை 6.30 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் 6.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானத்தில் 130 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: