கட்டணம் செலுத்தாமை – 800,000 நுகர்வோரது மின்சார இணைப்பு துண்டிப்பு – பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழு தகவல்!
Monday, January 8th, 2024மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழுவில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை தமது பொறுப்பைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அந்த குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய மின் கட்டணத்தை, செலவுக்கு ஏற்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி!
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் நியமனம்!
பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீவிபத்து!
|
|