கடும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன மதுபான நிலையங்களை – யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையின் மத்தியிலும் மதுப்பிரியர்கள் கொள்வனவு செய்ய முண்டியடிப்பு!

Wednesday, May 13th, 2020

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் கடுமையான நிபந்தனைகளுடன் இன்றுமுதல் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் உல்லாச விடுதிகள், மற்றும் உணவகங்களில் உள்ள மதுபான நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது

அதேநேரம் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்ற பல்பொருள் அங்காடிகளில் மாத்திரம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள மதுபான நிலையங்களில் மது பிரியர்கள் மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக முண்டியடிக்கின்றதை அவதானிக்க முடிந்தது.

சமூக இடைவெளியினை பின்பற்றி மதுபானத்தை கொள்வனவு செய்வதற்காக மது பிரியர்கள் நீண்ட வரிசையில் வீதிகளில் நின்று மழையின் மத்தியிலும் தமக்கு தேவையான மதுபானத்தினை கொள்வனவு செய்வதற்காக காத்து நின்றனர். இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலைவயும் உருவாகியிருந்தது.

இதேவேளை மதுபான உரிமையாளர்களினால் மதுபான நிலையங்களுக்குள் ஒவ்வொருத்தர் மட்டுமே தனியாக சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப் படுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: