கடும் சுகாதார வழிமுறைகளுடன் மாகாண எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்ட அளவில் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, June 21st, 2021

நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகள் இன்றையதினம் முன்னெடுக்கப்படுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்த வாரம்முதல் வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி சுமார் 6 ஆயிரம் பேருந்துகளை அடுத்த வாரம்முதல் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வழமைபோன்று இன்றையதினம் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

இறுக்கமான சுகாதார வழிமுறைகளுடன் மாகாணங்களுக்குள் தேவையான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: