கடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Thursday, September 9th, 2021

கோவிட் 19 பரவலால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகை கால எல்லையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிவரை நீடிப்பதனை பரிசீலனையில் கொள்ளுமாறு, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் மத்திய வங்கி கோரியுள்ளது.

இந்த சலுகைகள், பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு 2022 ஜனவரி முதல் தொடர்ந்து தங்கள் நிலுவைச் தொகைளைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது

000

Related posts: