கடந்த 6 மாதங்களில் வீதி விபத்துகளில் 1,459 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Thursday, July 14th, 2022

2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதிமுதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 1,387  பாரிய வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 3,326 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் 4,309 சிறு விபத்துகளும், 2,229 விபத்துக்களில் சொத்துக்களுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் திடீரென வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததினால் விபத்துக்கள் மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக சீன அதிபருக்கு மடல் அனுப்பியுள்ள இலங்கையின் அரச தலைவர் !
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு - தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி...
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால்...