கடந்த 4 மாதங்களில் இலஞ்சம் பெற்ற பதினொரு முக்கிய புள்ளிகள் கைது – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு !

இந்த வருடத்தின் கடந்த 4 மாத காலப்பகுதிக்குள் லஞ்சம் பெற்ற அரச அதிகாரிகள் 11 பேரை கைது செய்ய முடிந்துள்ளது என லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.
இந்த 11 பேரில் ஜனாதிபதி செயலக பிரதானியும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவரும் அடங்குகிறார் எனவும் அவர் கூறியுள்ளார். இவர்கள் தவிர கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் அதிகாரிகள் ஐவர் காணப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
எமது சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு ஏற்ப சுற்றிவளைப்புக்களை மேற்கொள்கின்றோம். லஞ்சம் தொடர்பிலான முறைப்பாடுகள் ஒவ்வொரு நாளும் குவிந்த வண்ணமுள்ளன. கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்தே நாம் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்கின்றோம்.
லஞ்சம் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் இருப்பின் 1954 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் நெவில் குருகே அறிவித்துள்ளார்.
Related posts:
|
|