கடந்த அரசாங்கத்தின் மருந்து கொள்வனவில் பாரிய நிதி முறைகேடு – CID யில் முறைப்பாடு !

Wednesday, April 7th, 2021

கடந்த அரசாங்கத்தின் போது, வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை அரசாங்கம் வழங்குவதில் பாரிய நிதி முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மதுர விதானகே –

“குறிப்பாக ஜனவரி 2015 முதல் 2019 இறுதி வரை, வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் வாங்குவதில் இலங்கை பொது சுகாதாரத் துறை பாரிய முறைகேடுகளை செய்திருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளோம்.

அத்துடன் பல நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டது. அதன்படி, 2015 – 2019 காலகட்டத்தில், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளை வாங்குவதில் கடுமையான முறைகேடு நடந்ததை நாங்கள் கண்டறிந்துள்ளோம்

குறிப்பாக பொதுச் சந்தையில் சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மருந்து ஒன்றை அரச மருந்தக கூட்டுத்தாபனம் ஊடாக 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட்தக்கது.

Related posts: