கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் செய்தி!

Wednesday, July 12th, 2017

மல்லாகத்தில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

6 பேர் கொண்ட குழு ஒன்றினால் மல்லாகத்தில் வைத்து கடத்தப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி, பின்னர் வரணி பகுதியில் கடத்தப்பட்ட வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் நோக்கில் கடத்தப்பட்டதாகவும், இதற்காக குறித்த மாணவிக்கு போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை வழங்க முயற்சித்த போதும், அவர் அதனை தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தல்காரர்களை எதிர்த்து குறித்த மாணவி நீண்டநேரம் போராடிய நிலையில், வரணி பகுதியில் வைத்து வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார் கடத்தல்காரர்கள் யாரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

குறித்த மாணவி சிறு காயங்களுக்கு ஆளான போதும், குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எவையும் நேரவில்லை என்று காவற்துறையினரும், வைத்தியத் தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related posts: