கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு :கொடிகாமம் பொலிஸார்!

Sunday, December 2nd, 2018

தென்மராட்சி கிழக்கு கெற்பேலிப் பகுதியில் அண்மைக்காலமாக கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதென கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கெற்பேலிப் பகுதியில் 7 ஆயிரத்து 500 மில்லிலீற்றர், 750 மில்லிலீற்றர், ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரையும் பற்றை மறைவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறுவனொருவனும் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் நால்வரும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கொடிகாமம் பொலிஸார் இவ்வாறு குறிப்பிட்டனர்.

Related posts: