ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு!
Wednesday, June 26th, 2019
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை நாளை மறுதினம்(28) நாரஹேன்பிட்டி ஷாலிக்கா மைதானத்துக்கு வருகைதருமாறு போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம்!
வரவு செலவு திட்டத்தை ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
மதுபான அனுமதிபத்திரம் - அடுத்த வருடம்முதல் புதிய நடைமுறை என அறிவிப்பு!
|
|
|


