ஓட்டமாவடியில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுப்பு!

நாட்டில் பருவபெயர்ச்சி மழை பெய்து வந்த நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடான பரிசோதனை நடவடிக்கைகள் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையிலும், தற்போது டெங்கு நோய் தாக்கமும் ஏற்பட்டுள்ள நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வீடு வீடுடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றது.
இதன்போது வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், வளாகத்தில் தேங்கிக் காணப்படும் கழிவு குப்பைகள் என்பன ஓட்டமாவடி பிரதேச சபையின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாகவும் ஒலிபெருக்கி மூலம் தெளிவூட்டப்பட்டது.
வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
000
Related posts:
|
|