ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவிப்பு!

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் முன்மொழிவு அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பில் விவாதிக்கப்படவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளைத் தொடர்வதற்காக வரி வசூலிக்க அமைச்சர் குணவர்தன முன்வைத்த முன்மொழிவு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பில் அரசாங்கம் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பொப்பிசை பாடகர் மனோகரனின் இழப்பு தமிழ்க் கலையுலகிற்கு பேரிழப்பு - டக்ளஸ் தேவானந்தா இரங்கல்
கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு!
கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|