ஒரு கோடி பெறுமதியான தமிழக மீன் பிடி படகுகள் அரசுடமையா​க்கம்!

Wednesday, March 6th, 2019

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையால் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை பறிமுதல் செய்யப்பட்ட இராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த ஆறு மீன்பிடி படகுகளுக்கான வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.  

அதன்போது படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகத காரணத்தால் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே நேற்று நடைபெற்ற தங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு படகுகளுக்கான விசாரணையில் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரான படகு உரிமையாளர்கள், நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக வழக்கின் தீர்ப்பை வரும் 14ம் திகதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related posts: