ஒரு இலட்சம் காணி அலகுகள் வழங்கும் வேலைத்திட்டம் – முதற்கட்டத்தில் 20 ஆயிரம் இளம் முயற்சியாளர்களுக்கு ஜுன்முதல் காணிகள் வழங்க ஏற்பாடு!
Monday, March 15th, 2021நாட்டில் 20 ஆயிரம் இளம் முயற்சியாளர்களுக்கு இந்த வருட நடுப்பகுதியில் காணி அலகுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது இளம் முயற்சியாளர்களுக்காக ஒரு இலட்சம் காணி அலகுகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக இது அமையும் எனவும் காணி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
காணி அலகுகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 35 ஆயிரம் இளம் முயற்சியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர் இவர்களில் தெரிவுசெய்யப்பட்ட முயற்சியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இந்நாட்களில் இடம்பெறுவதுடன், அவை எதிர்வரும் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நுண் தொழில் முயற்சி மற்றும் தேசிய உற்பத்திகள் உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கே குறித்த காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, எதிர்வரும் ஜுன் மாதம்முதல் காணிகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் காணி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|